படைப்பு என்பது
முன்னோர்களை அல்லது முன்னோர் வழிபட்டு வந்த தெய்வங்களை அந்த வம்சா வழியினர்
நினைத்துச் சிறப்பான முறையில் வழிபடுவதாகும். சில குடும்பத்தினர் தத்தம் வீட்டில்
விசேடங்கள் துவங்குவதற்கு முன்போ அல்லது முடிந்த பிறகோ படைப்பார்கள்.
அவ்வாறு இந்நகரின் வைரவன்
கோவில், மாத்துர் கோவில், பிள்ளையார்ப்பட்டி கோவிலாரில் ஒரு பிரிவினர் படைப்பு
வீடுகளை கொண்டு படைப்பு நடத்தி வருகின்றனர். குருவிக்கொண்டான்பட்டி புள்ளிகள் 22,
காரைக்குடி புள்ளிகள் 55, நற்சாந்துப்பட்டி புள்ளி 1, வலையப்பட்டி புள்ளிகள் 7 ஆக
85 வயிரவன் கோவில் நகரத்தார் குடும்பங்களை நாச்சிமார் படைப்பு வழிபடப்படுகின்றது
குழந்தைகளை இடுப்பில்
ஏந்திய வண்ணம் உள்ள பெண் தெய்வங்களை சிலை ரூபங்களாக வைத்து வழிபடபடுகின்றனர்.
இத்தெய்வங்களுடன் சின்ன கருப்பரையும் இணைந்து வழிபடுகின்றனர் இரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு முறை இரண்டு நாட்கள் பால் படைப்பாக நடத்தி வருகின்றனர். மு.பழ. பொது வீட்டில்
படைப்பு வீடு உள்ளது.
|