Top Banner
  Wednesday, February 22, 2012  |  

மாத்தூர் கோவிலார் படைப்பு

அருள்மிகு தெண்டாயுதபாணி அடைக்கம்மை அப்பத்தாள் படைப்பு வீடு

         இந்நகரில் இருந்து 8 கி.மீ தூரத்தில் துவார் என்ற கிராமத்தில் வள்ளிலிங்கம் என்ற கோவில் உள்ளது. அங்கு அடைக்கம்மை என்ற பெண் தெய்வம் தோன்றி வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. அடைக்கம்மை தெய்வத்தை அப்பத்தாள், ஆயாள், ஆத்தாள் என்ற பெயருடன் அழைத்து வருகின்றனர் மாத்தூர் கோவில், உறையூர் பிரிவை சேர்ந்த குருவிகொண்டான்பட்டி, கீழச்சிவல்பட்டி, பி.அழகாபுரி தேவகோட்டை பங்காளிகள்.

         ஸ்ரீதெண்டாயுதபாணி, அடைக்கம்மை அப்பத்தாளுக்கு படைப்பு வீட்டை இவ்வூரில் உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். பழனி மலையில் உள்ள உருவத்தினை போன்று ஸ்ரீதெண்டாயுதபாணி உருவம் அமைந்து இருப்பது சிறப்பிற்குரியது. 1999 ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை ஸ்ரீதெண்டாயுதபாணி பூசையும் அடைக்கம்மை அப்பத்தாள் படைப்பும் நடைபெற்று வருகின்றது. படைப்பு வீடும் புதுப்பிக்கப் பெற்று புதுபொழிவுடன் திகழ்கின்றது.

         மாதந்தோறும் கார்த்திகையன்று ஸ்ரீதெண்டாயுதபாணிக்கு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு குருவிகொண்டான்பட்டியில் 40 புள்ளிகளும், கீழச்சிவல்பட்டியில் பி.அழகாபுரியில் 45 புள்ளிகளும், தேவகோட்டையில் 10 புள்ளிகளும் ஆக 95 புள்ளிகள் சேர்ந்து படைப்பை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இப்படைப்பு வீட்டின் பரம்பரை பூசாரியும் பானை வைப்பதும் வ.அழ.குடும்பத்தினராம்.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்