Top Banner
  Wednesday, February 22, 2012  |  

பிள்ளையார்பட்டி நகரத்தார் அடைக்காத்தாள் நல்ல தங்காள் படைப்பு வீடு

         அடைக்காத்தாள் நல்ல தங்காள் பொது படைப்பு வீடு பிள்ளையார்பட்டி கோவிலின் ஒரு பிரிவினரால் 1998 ஆம் ஆண்டு புதிய பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது.

         பிள்ளையார்பட்டி கோவிலைச் சேர்ந்த குருவிக்கொண்டான்பட்டி ஒரு பிரிவில் 16 புள்ளிகளுக்கும், மிதிலைப்பட்டியில் 44 புள்ளிகளுக்கும், கீழச்சிவல்பட்டியில் 16 புள்ளிகளுக்கும் சொந்தமான படைப்பு வீடு, மூன்று ஊர் பங்காளிகளும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குருவிக்கொண்டான்பட்டியில் வசித்தவர்கள். பின்னர் இரண்டு ஐயாக்கள் வீடுகள் மிதிலைப்பட்டியிலும் கீழச்சிவல்பட்டிக்கும் குடிபெயர்ந்த்துவிட்டார்கள். படைப்பும் தொன்று தொட்டு இடைவிடாமல் முறையாக நடைபெற்று வருகின்றது.

         இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாசி மாதம் வளர்பிறையில் மூன்று ஊர் பங்காளிகளும் சேர்ந்து வெள்ளிகிழமை காலை திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயிலுக்கு சென்று தங்கி, அங்கு எழுந்தருளியிருக்கும் வயிரவ சுவாமிக்கு உச்சி கால பூஜையில் அபிஷேக ஆராதனை செய்து, இரவு ஊர் திரும்பி திங்கட்கிழமை பகல் மூன்று ஊர் பங்காளிகளும் படைப்பு வீட்டிற்க்கு வந்து, மிதிலைப்பட்டி பூசாரி வீட்டினர் பேழை எடுத்து ஊருணிக்கு சென்று பேழை துவைத்து உலர்த்திவந்து பகல் உணவிற்க்கு 16 படி நெல் எடுத்து குத்தி அரிசி செய்து அடைக்காத்தாள் நல்லதங்காள்களுக்கு அனைத்து அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்த பின், பானை வைத்து சர்க்கரை பொங்கலிட்டு படையல் செய்து சுவாமி கும்பிட்டு மறுநாள் காலை மங்கல பொருட்கள் ஏலமிட்டு நிறைவு பெறும்

         பெண்மக்களுக்கும் புள்ளிகளுக்கும் காளாஞ்சி கொடுத்து படைப்பினை நல்ல முறையில் நடத்தி வருகின்றனர். கடந்த 25ஆண்டு காலமாக இப்படைப்பு நிர்வாகத்தினை இவ்வூரைச் சேர்ந்த வயி.லெ.வயிரவன் செட்டியார் அவர்கள் செய்து வருகின்றார்கள்.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்