Top Banner
  Wednesday, February 22, 2012  |  

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம்

Melmaruvathur Athiparasakthi vazhipattu manram

          குருவிகொண்டான்பட்டி மேல்மருவத்துர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் வார வழிபாட்டு மன்றம்(பதிவு எண்-1793) ஆங்கிரஸ வருஷம் புரட்டாசி மாதம் 9ஆம் தேதி (25-9-1992) சக்தி தெய்வத் திரு. கரு.க.கருப்பன் செட்டியார், சக்தி திரு.நாச்சியப்பண் ஆசாரி, சக்தி திரு.வயி.பழனியப்பன் ஆசிரியர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டு, மன்றம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

          மன்றத்தில் வார வழிபாடு, பெளர்ணமி, அமாவாசை வழிபாடுகள், மன்ற வேள்விகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் ஆடிமாதம் "கஞ்சி வாற்ப்பு" விழாவும் மன்ற உதய நாளில் ஆண்டுவிழாவும், அன்னதானமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சுமார் 100 பேர்களுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு இயங்கிவரும் மன்றம் ஆன்மீக பணிகளோடு சமுதாய சேவைகளையும் ஆற்றி வருகின்றது.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்