Top Banner
  Wednesday, February 22, 2012  |  

அருள்மிகு கீரணிப்பட்டி முத்துமாரியம்மன்

Arulmigu Muthumariamman, Keeranipatti

அருள்மிகு முத்துமாரியம்மன்

          குருவிக்கொணடான்பட்டி அடுத்துள்ள கீரணிப்பட்டியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு அன்னை முத்துமாரி அம்மனின்பால் மாறாத பக்தி கொண்டவர்களாக இவ்வூர் நகரத்தார்கள் தொன்று தொட்டு வணங்கி வருகின்றனர். தங்கள் இல்லங்களில் நடைபெறும் குழந்தைகள் பிறப்பு சடங்குகள், திருமணம் போன்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் அன்னையை வழிபடுவதை முதலாவது கடமையாக கொண்டுள்ளனர். நவராத்திரி விழாவில் விஜயதசமி அன்று பள்ளிக் குழந்தைகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அம்மனின் திருக்கோவில் வளர்ச்சியில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி கொண்டு வருவதுடன் பல பசு மடங்களையும், தண்ணீர் பந்தல்களையும் அமைத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இளைஞர்களால் தொடங்கப்பெற்ற ஒரு தண்ணீர் பந்தல் இளவட்டம் தண்ணீர்பந்தல் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

          ஆண்டுதோறும் பங்குனித் திங்களில் அன்னைக்கு நடைபெறும் பூச்சொரிதல் விழாவில் அட்சய ஆண்டு (1927) முதல் பூத்தட்டுகள், பால்குடங்களுடன் சென்று பூத்திருவிழாவில் பங்குகொண்டு வருகின்றனர்.

          இவ்வாறாக அன்னையை வழிபடுவதை பெரும் பேறாக கருதி வாழும் நகரத்தார்களுக்கு எல்லா நலன்களும் வளங்களும் பெருகிட அன்னையின் பேரருள் என்றும் துணை நிற்பதாக. அன்னை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு வருகின்ற தை மாதம் 15ம் தேதி (29/01/2007) திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெறயிருக்கின்றது.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்