Top Banner
  Wednesday, February 22, 2012  |  

குருவிகொண்டான்பட்டி பற்றிய முதல் தமிழ் இணையதளம்.

Nagara Sivan Kovil Gopuram

          நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் புள்ளி ஒரு சதவீதம் மட்டுமே உள்ள இனம் நகரத்தார் இனம். ஆனால், நூறு கோடி மக்களும் வாழ வழிகாட்டிய பெருமைக்குரிய இனம் நகரத்தார் இனமாகும்.

          "தன்வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டை சுடுவான்" என்ற தத்துவம் சொன்ன பட்டினத்தார் பிறந்த பெருமைக்குரிய இனமாகும்.

          பண்டிதமணி கதிரேசனார், பாடுவார் முத்தப்பர், ஒப்பில்லா கவி சொன்ன கண்ணதாசன், உலகிற்கு கம்பனைக் காட்டிய கம்பனடிப்பொடி சா.கணேசன், காலம் போற்றும் சொ.முருகப்பா, தமிழ்க்கடலாம் ராய.சொ., தமிழ் காத்த கருமுத்து தியாகராசர், குழந்தைக்குக் கவி சொன்ன வள்ளியப்பா, குறுநாவல் படைத்த அரு.இராமனாதன், கல்கண்டாம் தமிழ்வாணன், சின்னத்திறை கண்ட ஏ.வி.மெய்யப்பர், இவர்கள் மட்டுமல்ல, எண்ணற்ற கவிஞர்களை அறிஞர்களை தமிழுக்கு தந்த இனம் நகரத்தார் இனம்.

          மதுரையை ஆண்ட பாண்டியனுக்கும், மருது சகோதரர்களுக்கும் பின்னால் சிவகங்கைச் சீமையை உள்ளடக்கிய செட்டிநாட்டில் ஒன்பது நகரக்கோவிலுடன் ஒவ்வொரு ஊரிலும் கோவிலை உருவாக்கியதோடு தெந்திருப்பதியை கண்ட பெருமையை பெற்ற இனம் நகரத்தார் இனமாகும்.

          இப்படி பொது நோக்கத்தோடு வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற இந்த நகரத்தார் இனத்தில் பிறந்ததற்கு நாங்கள் "என்ன தவம் செய்தோமோ!".

          இறைவனின் திருவருளால் எங்கள் ஊரான குருவிக்கோண்டான்பட்டியின் பெருமைகளை தாய்மொழியாம் தமிழில் இவ்வுலகிற்கு இணையதளம் மூலமாக கொடுப்பதற்கு நாங்கள் பெருமை அடைகின்றோம். எங்களின் இந்த சிறிய முயற்ச்சிக்கு உருதுணையாக இருந்த நகரத்தார்களுக்கும், ஊர்மக்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்