Top Banner
  Wednesday, February 22, 2012  |  

நகரத்தார் வரலாறு

          நாட்டுக் கோட்டை நகரத்தார்கள், தமிழகத்தின் மிகத் தொன்மையான இனங்களில் ஒரு வகையினர். இவர்கள் மிகச்சிறிய மக்கள் தொகையினராக இருந்தாலும், தேசமெங்கும் பேசப்படும் புகழ் பெற்றவர்கள். அதற்கு காரணம் அவர்கள் பண்பாடும், பெருமையும் தான்.

          நகரத்தார் சமுகம் ஆரம்ப காலங்களில் சோழ மன்னரின் கீழ் வாழ்ந்தவர்கள். இவர்கள் காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து கடல் வழியாக ஸ்ரீலங்கா, பர்மா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் தங்கள் வாணிபத்தை வளர்த்தனர். வாணிபம் மட்டுமல்லாது அதனுடன் ஆன்மீகத்தையும் அந்தந்த நாடுகளில் வளர்த்தனர். இன்றும் இந்த நாடுகளில் முருகன் கோவில் இருப்பதை காணலாம். பிணாங்கு, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள முருகன் கோவில் நகரத்தார்களால் கட்டப்பெற்றது. மேலும் நகரத்தார்கள் கல்வி மற்றும் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் உள்ளவர்களாக திகழ்கின்றனர். அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தியாகராசர் கல்லூரிகள் எடுத்துக்காட்டாகும்.

          நகரத்தார் சமுகம் பாண்டிய மன்னனிடம் தஞ்சம் அடைந்தவர்கள். அதற்கு காரணம் சோழ மன்னன் நகரத்தார் பெண்ணின் மீது கொண்ட காதல். நகரத்தார்கள் மன்னரிடம் அப்பெண்னண திருமணம் செய்ய வற்புறுத்தினர், ஆனால் மன்னர் மறுத்துவிட, நகரத்தார் சமுகத்தை சார்ந்த அனைத்து மகளிரும் மாண்டனர், ஆண்கள் பாண்டிய மன்னனிடம் தஞ்சம் அடைந்தனர். பாண்டிய மன்னன் நகரத்தார்களிடம் அவர்களுக்குரிய இடத்தை தேர்ந்து எடுத்து கொள்ள சொன்னார், அப்பொழுது அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் செட்டிநாடு.

          பாண்டிய மன்னன் நகரத்தார் வம்சம் வளர அவர்களை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதனால் நகரத்தார் ஆண்கள் சைவ வெள்ளாளர் சமுகத்தை சார்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் நகரத்தார் சமுகம் சைவ வெள்ளாளர் சமுகத்தில் இருந்து பெண் எடுத்துக்கொள்வர் ஆனால் பெண் கொடுப்பது இல்லை. இதனால் கூட நகரத்தார் தந்தையை அப்பச்சி என்றும், அம்மாவை ஆத்தா என்றும் அழைப்பதற்க்கு காரணமாக இருக்கலாம்.

"வாழ்க நகரத்தர்கள் வளமுடன் எந்நாளும்..."

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்