Top Banner
  Wednesday, February 22, 2012  |  

ஊர் திருவிழா

         குருவிக்கொணடான்பட்டி அடுத்துள்ள கீரணிப்பட்டியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு அன்னை முத்துமாரி அம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனித் திங்களில் அன்னைக்கு நடைப்பெறும் பூச்சொரிதல் விழாவில் அட்சய ஆண்டு (1927) முதல் பூத்தட்டுகள், பால்குடங்களுடன் சென்று பூத்திருவிழாவில் பங்குகொண்டு வருகின்றோம். பத்தாம் திருநாளன்று அருள்மிகு அன்னை இளையாத்தங்குடிக்கு பவனியாக செல்லுவது வழக்கம். அவ்வாறு செல்லும்போது, இவ்வூர் நகரத்தார்கள் வேண்டுகோளுக்கிணங்கி, இந்நகருக்குள்ளும் வலம் வந்து அருள்புரிய வேண்டும் என்ற பெரும் விருப்பம் ஜய வருடம் சித்திரை மீ முதல் நாள் (1954) நிறைவேறியது. அன்று முதல் ஆண்டு தோறும் அன்னையை ஊரின் எல்லையில் நகரத்தார்கள் எதிர் கொண்டு அழைத்து வந்து உலா வரச்செய்து வீடுகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் செய்து வழியனுப்பி வைப்பதை பெரும் விழாவாக நடத்தி மகிழ்ந்து வருகின்றோம்.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்