Top Banner
  Wednesday, February 22, 2012  |  

பிரதோஷ காலம்

Nandhi Pagavan Prathosa Thirnal anru!

அருள்மிகு நந்திபகவான்

          வளர்பிறையில் ஒரு பிரதோஷமும், தேய்பிறையில் ஒரு பிரதோஷமும், ஆக மாதத்தில் இரண்டு தடவைகள் பிரதோஷ காலம் வருகிறது.

          பிரதோஷ காலம் என்பது சரியாக ஏழரை நாழிகை மட்டும்தான். திரியோதசி நாளில், சூரியன் மறையும் காலமான மாலையில், சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷ காலம் எனப்படும். மாலையில் சரியாக 4.30 மணிமுதல் 7.00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம்.

          மாதம் இருமுறை மேற்படி பிரதோஷம் திரியோதசி நாளில் வந்த போதிலும் சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. சித்திரை மாதத்தில் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம் எனப்படும்.

          "ஓம் சிவாய நம்" என்று சிவாலயம் சென்று 108 தடவை சொல்லி வந்தால், எல்லா நன்மைகளும் கைகூடி குடும்பம் நலமடையும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் சிவனை வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.

          கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் வீட்டிலாவது பிரதோஷ நாட்களில் சிவனை வணங்கி பாடல்களைப் பாடி, திருமுறை போற்றிகள், சிவலிங்க அஷ்டகம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

          உலகில் தீமைகள் அழிந்து நன்மைகள் வளரவும், பக்தி தழைத்து ஓங்கவும் எல்லாம் வல்ல கயிலைநாதன் அருள் புரியட்டும்.

          இங்கு (குருவிக்கொண்டான்பட்டியில்) ஒவ்வொரு பிரதோஷமும் தொன்று தொட்டு சூரக்குடி கோவிலைச் சேர்ந்த சிவ.கரு.முத்தையா செட்டியாரால் நடத்தப்பட்டது, தொடர்ந்து இன்றும் அவர்களுடையக் குடும்பத்தினரால் நடத்தப்படுகின்றது.

Increase எழுத்து வடிவம் Decrease | எழுத்து வண்ணம் Change Color

கடைசியாக இணையதளம் மாற்றியமைத்தது - 01/28/2012
உருவாக்கமும் பேணுதலும் இரா.இராமநாதன் மற்றும் பழ.அழகப்பன்