பொங்கல் விழா தகவல்கள் |
வீடுகளில் பொங்கல் வைக்கும் நேரம் மற்றும் நகரசிவன்கோவிலில் பொங்கல் பானை வைக்கும் நேரம்
ஆகியவை நகரசிவன்கோவிலின் வாயிலில் எழுதி வைக்கப்படும். அதன்படி குருவிக்கொணடான்பட்டி
வாழும் நகரத்தார்கள் பொங்கல் அன்று முதலில் ஆனை விழுந்தான் ஊருணி தேசிகவிநாயகருக்கு பொங்கல்
வைத்த பிறகு நகரசிவன்கோவிலுக்கு சென்று பொங்கல் பானை வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.
சில நகரத்தார்கள் சிறு வயதில் விளையாட்டாக பொங்கல் வைத்து வணங்கிய விநாயகருக்கு,
இன்றும் தத்தம் பிள்ளை பேரன், பேத்திகளுடன் வந்து பொங்கல் வைப்பது தொடர்கிறது.
|
நகரசிவன்கோவிலில் பொங்கல் பானை வைத்த பிறகு அவரவர் தங்களது பொது படைப்பு வீடுகளில் (உள்ளுராக
இருந்தால்) பொங்கல் வைப்பர். அதன் பிறகே தத்தம் வீடுகளில் பொங்கல் வைப்பர். சில படைப்பு
வீட்டுக்காரர்கள் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து,
எடுத்து வந்து அப்படைப்பு வீடுகளில் வைத்து பிரசாதம் வழங்குவர்.
|
மதியம் நகரசிவன்கோவிலில் அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். இதனை ஆண்டு தோறும்
நகரத்தார்கள் தோய்வின்றி செய்து வருகின்றனர்.
|
மறுநாள், மாட்டு பொங்கல் அன்று அதிகாலையில் நந்தி பகவானுக்கு 30க்கும் மேற்பட்ட அபிஷேகம் நடைபெறும்.
அதன் பிறகு நந்தி தேவனுக்கு குருவிக்கொணடான்பட்டி ஊர் மக்களால் கொண்டுவரபட்ட பல வகை மாலைகளால்
அலங்காரம் செய்து திபாராதணை காட்டப்படும். பழத்தாலும், மலராலும், முறுக்கு, நவதாணியங்கலாலும்
அலங்கரிக்கபட்ட நந்தி தேவனை காண கண் கோடி வேண்டும் என்பதை கண்டவர்கள் கூற தவறுவதில்லை.
|