குருவிக்கொண்டான்பட்டி நகரச்சிவன் கோவிலில் தனிப்பட்ட நகரத்தார்கள் உபயமாக பல
கட்டளைகளை எற்ப்படுத்தியுள்ளார்கள்.
|
உச்சிக்கால
பூஜையின் போது தளுகை நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் பிள்ளையார்பட்டி கோவில் நத்தவனம்
மு.சித.குடும்பத்தினர் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நாள் தோறும் இரண்டு தளுகைகள் தாயரித்து
நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது. |
அதிகாலை
திருவனந்தல் பூஜையின் போது தோசை நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் சூரைக்குடி கோவில்
வீர.சே.குடும்பத்தினர் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நாள் தோறும் திருவனந்தலின் போது
தோசைகள் தயாரித்து நிவேதனம் செய்யப்படுகின்றது. |
சாயரட்சை பூஜை நிவேதன கட்டளை |
சாயரட்சை பூஜையின்
போது கடலைப்பருப்பு, சுண்டல் நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் இரணிக்கோவில்
முப.அ.சொ.முப.அரு.குடும்பத்தினர் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நாள் தோறும் சாயரட்சை
பூஜையின் போது கடலைப்பருப்பு, சுண்டல் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. |
வியாழக்கிழமை தயிர்சாத நிவேதனக் கட்டளை |
வியாழக்கிழமை
தோறும் உச்சிக்கால பூஜையின் போது தயிர்சாதம் நிவேதனம் செய்வதற்காக இவ்வூர் இரணிக்கோவில்
மு.ப.அ.சொ.அ.சொ குடும்பத்தினர் அறக்கட்டளை நிறுவி வியாழக்கிழமை தோறும் உச்சிக்கால பூஜையின்
போது தயிர்சாதம் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. |
சைவ சமய
குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் குருபூஜைகளை ஆண்டு தோறும்
நடத்த இவ்வூர் இளையாற்றங்குடி கழனிவாசல் கோவில் முப.மு.குடும்பத்தினர் அறக்கட்டளை நிறுவி ஆண்டு
தோறும் நால்வர்களின் குருபூஜைகளை சிறப்பாக நடத்திவருகின்றார்கள். |
குருவிக்கொண்டான்பட்டியில்
வாழும் நகரத்தார்கள் கோவிலின் ஒருநாள் நடைமுறைச் செலவின் ஒரு பகுதியை உபயதாரர்/கட்டளைதாரர்
ஏற்கும் விதமாக, புதிய திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தில் சேரும்
கட்டளைதாரரிடம் ரூ.3000/= வசூலிக்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் விருப்பத்தின் பேரில் குறிப்பிடும்
ஆங்கிலத்தேதியில்; ஆண்டுக்கு ஒருமுறை காலசந்தி (காலைபூஜை) பூஜையின்போது - பால் அபிஷேகம்
செய்து பிள்ளையார், சுவாமி, அம்மன் ஆகியவற்றிற்கு அவர்கள் பெயர், நட்சத்திரத்தில் அர்ச்சனை
செய்யப்படுகிறது. கட்டளைதாரரின் விருப்பத்தின் பெயரில் அவர்கள் பிரதிநிதியிடம் காளாஞ்சி பிரசாதம்
கொடுக்கப்படும். மேலும் கட்டளைதாரருக்கு தபாலில் விபூதி பிரசாதம் அனுப்பிவைக்கப்படும்.
தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் ரூ.3000/=
வீதம் அனுப்பிவைத்து இத்திட்டத்தில் சேர்ந்து அருள்தரும் சொக்கலிங்கப்பெருமான், மீனாட்சி அம்மனின்
பேரருளைப் பெற வேண்டுகிறோம்.
இந்த கட்டளை அபிஷேகத்திற்க்கு
இத்துடன்
இனைத்துள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டியது. |